யாக்கோபு நிருபம்

மீண்டெழுதலின் விசுவாசம் –

கிறிஸ்து பிறப்பிற்கு பின்பான 50 வருடத்திய விசுவாசம்

மீண்டெழுதல்

மீண்டெழுதல் என்கிற வார்த்தையானது, கடந்த காலத்தைப் பின்பற்றி, எதிர்காலத்தை நடத்துவது. மீண்டெழுதல் என்ற வார்த்தையானது, கடந்த காலத்தில் இருந்த ஒன்றை மீண்டும் பின்பற்றி, செயல்படக்கூடியவர்களாக மாற்றவும், அல்லது சிறப்படையவுமாக செய்யக்கூடியது. மீட்டெழுதலின் இயக்கமானது, கடந்த காலத்திலிருந்து காரியங்களைக் நிகழ்காலத்திற்கு கொண்டுவந்து, அதற்கு புதிய ஜீவனைக் கொடுப்பதாகும்.

மீட்டெழுப்பப்பட்ட விசுவாசம்

நோக்கம்

யாக்கோபு நிருபமானது, கிறிஸ்தவ விசுவாசத்தை மிகவும் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்கச் செய்கின்றது. பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களான நீதிமொழிகள், புலம்பல் போல, யாக்கோபு கிறிஸ்தவர்களுக்கு அனுதினமும் ஏற்படக்கூடிய சோதனைகளைக் குறித்து கவனம் செலுத்துகிறது. சோதனை, ஞானம் , ஏழ்மை, வசதி, பாகுபாடு, சமூக நீதி, நாவு, பிரார்த்தனை, நோய் மற்றும் பல.

இந்தப் புத்தகமானது, மிகவும் அதிக அறிவுரைகளால் உதவியாக இருக்கின்ற அதே வேளையில், கிறிஸ்தவர்கள் இயேசுவிடம் செய்த அறிக்கையின்படி கண்டிப்பாக வாழ வேண்டும் என்பதையும் உறுதி செய்கிறது.

108 வசனங்களிலே, 59 கட்டளைகளோடு, இந்தப் புத்தகமானது, நீதியான வாழக்கைக்கான ஒரு சரிபார்ப்பு பட்டியலைக் கொடுக்கிறது. யாக்கோபின் புத்தகத்தைப் படிப்பதால், சுவிசேஷத்தை நோக்கி நம்மை நகர்த்தாமல், பெருமையையும், விரக்தியையும் கொண்டுவரும் என்பது தவறான நம்பிக்கை ஆகும்.

யாக்கோபு நிருபத்தை, ஒரு தொடர்ச்சியான கட்டளைகளாக வாசிப்பவருக்கு, நாம் நன்னடத்தைகளிலிருந்து தவறியிருக்கின்றோம் என்கிற எண்ணத்தைக் கொண்டுவரும்.

எவ்வித சந்தேகமும் இல்லாமல், யாக்கோபு கீழ்ப்படிதலையும், கிறிஸ்தவர்கள் தாங்கள் அறிந்திருப்பதையும், சொல்லுவதையும் செய்ய வேண்டுமென்பதையும் உணர்த்துகிறார்.

யாக்கோபு, வழக்கமான சுவிசேஷ வார்த்தைகளையும், இயேசுவின் பெயரை இரண்டே தடவை மட்டும் உபயோகப்படுத்தியிருந்தும், இயேசுவை எங்கேயும் மேற்கோள் காட்டாமலும் இருந்தாலும், இதை எழுதியவர், இயேசு தாமே உபயோகப்படுத்தின அதே மொழிநடையை உள்வாங்கினவராக இருக்கிறார். முக்கியமாக மலைப் பிரசங்களில்.

யாக்கோபின் சுவிசேஷம் என்பது, இயேசுவின் செய்கைகளை குறைத்து, மனிதனின் கிரியைகளை உயர்த்துவது கிடையாது. அதற்கு மாற்றாக, யாக்கோபு மனிதனின் கிரியைகள் என்பது, இயேசுவின் கிரியைகளால் மாற்றப்பட்ட இருதயத்தால் வரக்கூடிய இயல்பானது என்பதை எடுத்துரைக்கிறார்.

எருசலேமின் நிலை – கிபி 50

இயேசு உயிரோடு எழுந்த நாற்பது நாட்களுக்குப் பின்பாக, அவர் பரலோகத்திற்கு பரமேறுவதற்கு முன்பாக, அவர் அவருடைய சீடர்களை எருசலேமிற்கு வெளியிலுள்ள ஒலிவ மலையில் கூடிவரச் செய்தார்.

அங்கு, அவர் அவருடைய சீடர்களிடம் கூறியதாவது, அவர்கள் பரிசுத்த ஆவியினால் பெலனடைந்து, அவர்கள் எருசலேமிலும், யூதாவிலும், சமாரியாவிலும். உலகின் எல்லா பகுதிகளிலும் அவருக்கு சாட்சிகளாக இருப்பீர்கள் என்றார்.

அவர்கள் எருசலேமிற்கு வந்து, அங்கு பெந்தேகோஸ்தே நாளிலில் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். அப் 2

பின்பு சீடர்கள், இயேசுவை நகரம் முழுவதும் அறிக்கையிட்டார்கள். ஆனால் அவர்கள் எருசலேமை விட்டுப் போகவில்லை.

வார்த்தை பிரபலமானது, ஆனால் சீக்கிரமாக உபத்திரவங்கள் கிறிஸ்தவர்களுக்கு வந்தது. இயேசுவின் தொடக்ககால சீடரான ஸ்தேவான், மதவாதிகளால் கல்லெறிந்து கொல்லப்பட்ட நாள் முதல், கிறிஸ்தவ யூதர்கள் நாடு முழுவதும் சிதறிப் போனார்கள்.

கிறிஸ்தவர்கள் தங்களது சக யூதர்களால் வெறுக்கப்பட்டார்கள். முக்கியமாக, ஏழைகளும், பொருளாதாரத்தில் குறைவுண்டவர்களும், கலாச்சாரத்தில் குறைவுள்ளவர்களும் வெறுக்கப்பட்டார்கள்.

அதிகாரமும், பணமும் இல்லாமல், ஏழைகள் யூதர்களின் கொடுமையினால் ஒடுக்கப்பட்டார்கள். ஏரோது அகரிப்பா கிபி 44 ஆம் ஆண்டு இறந்த பின்பு, எருசலேம் முழுவதும் கலவரங்களும், சண்டைகளும் எழுந்தன். ஒடுக்கப்பட்டவர்கள் திருப்பி தாக்க ஆரம்பித்தனர், மேலும் பணக்கார ஒடுக்குபவர்களையும், ரோம தலைவர்களையும் கொல்லுவதற்காக கூலியாட்களையும் அமர்த்தினர்.

இறுதியாக கிபி 66 இல், மிகப்பெரிய புரட்சி உருவாகி, எருசலேமும், அதன் ஆலயமும் கிபி 70ல் அழிவுக்குள்ளானது.

யாக்கோபு, இந்த நிருபத்தை, இந்தக் காரியங்கள் எழும்பத் துவங்கும்போது , நாடு முழுவதும் சிதறியிருக்கின்ற யூதர்களுக்காக எழுதியுள்ளார்.

அவர், பணக்கார ஒடுக்குபவர்களை கண்டிக்கிறார். அவர் கிறிஸ்தவர்களை தங்களின் பாடுகளின் மத்தியிலும், சமாதானத்துடனும், அன்போடும் வாழ கட்டளையிடுகிறார்.

யாக்கோபு நிருபத்தை எழுதியவர் யார் என்பதை பின்னர் பார்க்கலாம்.