ஏனோக்கு அதிகாரம் 14

அந்த தரிசனத்திலே கண்டபடியே, மிகவும் பரிசுத்தராயிருக்கின்றவரின் கட்டளைப்படி, நித்திய காவல்காரர்களுக்கான தண்டனைகளை இப்புத்தகம் கொண்டுள்ளது.

நான் என் உறக்கத்தில் கண்டவைகளை இப்பொழுதுோ என்னுடைய நாவினாலும், மாமிசத்தினாலும், உன்னதமானவர் உரையாடக் கொடுத்த என் வாயின் மூச்சுகளாலும், இருதயத்தின் உணர்வினாலும் உரைக்கின்றேன்.

மனிதருக்கு உலகத்தின் ஞானத்தை அறிந்து கொள்ளும் வல்லமையைத் தந்து, அவனைப் படைத்ததுபோல, அவர் சொர்க்கத்தின் பிள்ளைகளான காவல்காரர்களை தண்டிக்கும் வல்லமையை தந்து என்னையும் படைத்தார்.

உங்களுடைய மனுக்களை நான் எழுதினேன். என்னுடைய தரிசனத்தில் கண்டதாவது, உங்களுடைய மனுக்கள் பதிலளிக்கப்பட மாட்டாது. நித்திய காலமளவும், இறுதியில் நியாயத்தீர்ப்பு உங்கள் மீது வருமளவும், உங்களுடைய மனுக்கள் பதிலளிக்கப்பட மாட்டாது.

The Book of Enoch: The Book of Enoch: Chapter XIV (sacred-texts.com)

அன்றிலிருந்து நீங்கள் நித்திய காலமளவும் சொர்க்கத்திற்கு எறி இறங்க முடியாது. உலகத்தின் இறுதிநாள் வரையிலும் பூமியிலே இருக்கும்படியான கட்டளை பிறந்தது.