🎵 எல்லாருக்கும் மா உன்னதர் (261)
1. எல்லாருக்கும் மா உன்னதர்,
கர்த்தாதி கர்த்தரே ,
மெய்யான தெய்வ மனிதர் ,
நீர் வாழ்க, இயேசுவே .
2.விண்ணில் பிரதானியான
நீர் பகைஞர்க்காகவே ,
மண்ணில் இறங்கி மரித்தீர்;
நீர் வாழ்க, இயேசுவே
3.பிசாசு, பாவம், உலகை
உம் சாவால் மிதித்தே,
ஜெயித்தடைந்தீர் வெற்றியை;
நீர் வாழ்க ,இயேசுவே
4.நீர் வென்றபடி நாங்களும்
வென்றேறிப் போகவே ;
பரத்தில் செங்கோல் செலுத்தும்
நீர் வாழ்க , இயேசுவே.
5.விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்
என்றைக்கும் வாழவே ,
பரம வாசல் திறந்தோர்
நீர் வாழ்க, இயேசுவே.
🎧 இசை விரைவில் சேர்க்கப்படும்