🙏 ஆராதனை முறைமைகள்

CSI மாலை ஆராதனை

மாலை ஆராதனை முறை

துதி
துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் தன் ஆத்துமாவைப் பிழைக்கப்பண்ணுவான்.
எசேக்கியல் 18:27
என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
சங்கீதம் 51:3
என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
சங்கீதம் 51:9
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
சங்கீதம் 51:17
உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்.
யோவேல் 2:13
நம்முடைய தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு.
தானியேல் 9:9–10
பாவ அறிக்கை

பிரியமான சகோதரரே, நம்முடைய பாவங்களை பணிவோடும் தாழ்மையோடும் கடவுளின் சந்நிதியில் அறிக்கையிடுவோம்.

சர்வ வல்லமையும் மிகுந்த இரக்கமுள்ள பிதாவே, தப்பிப் போன ஆடுகளைப் போல உம்முடைய வழிகளை விட்டு அலைந்து போனோம்... ஆமென்.

பாவ மன்னிப்பு அறிவித்தல்

மெய்யாய் மனந்திரும்பி தமது பரிசுத்த சுவிஷேசத்தை உண்மையாய் விசுவாசிக்கிற யாவருக்கும், தேவன் பாவங்களை மன்னித்து விமோசனம் செய்கிறார்.

கர்த்தரின் ஜெபம்

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக... இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.

அப்போஸ்தலர் விசுவாசப் பிரமாணம்

வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்... நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்.

சமாதானத்திற்கான ஜெபம்

சகல பரிசுத்த விருப்பங்களுக்கும் காரணமாகிய கடவுளே, உலகம் தரக்கூடாத சமாதானத்தை உமது அடியார்களுக்குத் தந்தருளும்.

முடிவு ஜெபம் & ஆசீர்வாதம்

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியின் ஐக்கியமும் உங்களனைவரோடும் இருப்பதாக. ஆமென்.