சமாதானத்துக்காக ஜெபம்
1
சமாதானத்துக்குக் காரணரும் ஏக சிந்தையை விரும்புகிறவருமாகிய கடவுளே, உம்மை அறிவதே நித்திய ஜீவன், உம்மைச் சேவிப்பதே மெய்ச் சுயாதீனம், தேவரீரைத் தஞ்சமாகக் கொண்டிருக்கிற உமது அடியாராகிய நாங்கள், எந்த விரோதிகளுடைய வல்லமைக்கும் பயப்படாதிருக்கும்படியாக எங்கள் சத்துருக்கள் செய்கிற எல்லா பிரயத்தனங்களின்று, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையினால் எங்களைக் காப்பாற்றியருளும். ஆமென்.
2
சகல பரிசுத்த விருப்பங்களுக்கும் சகல நல்லோசனைகளுக்கும், சகல நீதியான கிரியைகளுக்கும் காரணராகிய கடவுளே, உலகம் தரக்கூடாத சமாதானத்தை உமது அடியாராகிய எங்களுக்குத் தந்தருளும். நாங்கள் உமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க மன உற்சாகமுள்ளவர்களாயிருந்து, சத்துருக்கள் பயமில்லாமல் உம்மாலே காக்கப்பட்டு, ஆறுதலோடும் அமைதலோடும் எங்கள் ஜீவ காலத்தைப் போக்குவதற்கு எங்கள் இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் புண்ணியங்களினிமித்தம் கிருபை செய்தருளும். ஆமென்