இரண்டாம் லித்தானியா
பரத்திலிருந்து வரும் சமாதானத்திற்காகவும் நம்முடைய ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காகவும் கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக.
கர்த்தாவே கிருபையாயிரும்.
அகில லோக சமாதானத்திற்காகவும் கடவுளுடைய பரிசுத்த சபைகளின் நல்வாழ்வுக்காகவும் அவைகளின் ஒருமைப்பாட்டுக்காகவும் கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக.
கர்த்தாவே கிருபையாயிரும்.
நம்முடைய பேராயர்களும் மற்றெல்லாப் பணிவிடைக்காரரும் விசேஷமாய்….. என்னும் நமது பிரதமப் பேராயரும்….. என்னும் நமது பேராயரும் நல்ல இருதயத்தோடும் சுத்த மனச்சாட்சியோடும் தங்கள் பணிவிடையை நிறைவேற்றக் கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக.
கர்த்தாவே கிருபையாயிரும்.
நமது தேசத்தின் அதிபதிகளுக்காகவும் அதிகாரம் வகிப்பவர் எல்லாருக்காகவும் கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக.
கர்த்தாவே கிருபையாயிரும்.
வியாதியஸ்தர் உபத்திரவப்படுவோர் துக்கப்படுவோர் மரணத்தறுவாயிலிருப்போர் அனைவருக்காகவும் கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக.
கர்த்தாவே கிருபையாயிரும்.
ஏழைகள் பட்டினியாயிருப்போர் அனாதைகள் விதவைகள் உபத்திரவப்படுவோர் அனைவருக்காகவும் கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக.
கர்த்தாவே கிருபையாயிரும்.
அந்தகாரத்தினின்று நம்மைத் தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய மகத்துவங்களைக் காண்பிக்கும் பொருட்டாக நமக்காகவும் கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கை பண்ணும் யாவருக்காகயும் கர்த்தரை நோக்கி ஜெபிப்போமாக.
கர்த்தாவே கிருபையாயிரும்.